பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தமிழ் ராக்கர்ஸில் வெளியான சர்க்கார்......!. படக்குழுவினர் பேரதிர்ச்சி!.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்து தீபாவளிக்கு வெளியாக உள்ளது இந்த சர்க்கார் படம். இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கள் ட்ராக் பாடலான சிம்டங்கரான் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
சர்க்கார் படத்தின் அனைத்து பாடல்களும் இன்று நடைபெறும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் வெளியிட இருந்தது. பிரபல தொலைக்காட்சியிலும் இதை நேரடி ஒளிபரப்பு செய்வதாக முன்னோட்டமும் போட்டுகொண்டுள்ளனர்.
இந்த நிலையில் தொடர்ச்சியாக இப்படத்தை பற்றிய தகவல்கள் தினம் தினம் வந்து கொண்டிருப்பதால் படத்தின் வெளியீட்டு நாளுக்காக விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் இன்று வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. அனைத்து பாடல்களும் வெளியாக உள்ள நிலையில் தமிழ் ராக்கர்ஸ்(தமிழ் எம்வி) என்ற இணையத்தளத்தில் நேற்று இப்படத்தின் அனைத்து வெளியிட்டுள்ளனர். இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.