பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
இணையத்தில் வெளியானது சர்க்கார் திரைப்படம்! சொன்னதை செய்த தமிழ் ராக்கர்ஸ்!
நடிகர் விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. ரசிங்கர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது சர்க்கார் திரைப்படம். இந்நிலையில் படத்தின் எச்.டி. பிரிண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழ் ராக்கர்ஸ் என்ற பெயரில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது.
படம் வெளியான சில நாட்களிலையே இணையத்தில் படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளது இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளம். அந்தவகையில் இன்று வெளியான சர்க்கார் திரைப்படத்தை ஒரே நாளில் வெளியிட்டது அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது.
இந்நிலையில் சர்க்கார் படத்தை எந்த இணையதளத்திலும் வெளியிட கூடாது, அனைத்தையும் முடக்கவேண்டும் என்று சன் பிக்ச்சர்ஸ் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்நிலையில் குறிப்பிட்ட சில இணையதளங்களை முடக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் சர்க்கார் படத்தை நாங்கள் இணையதளத்தில் வெளியிடுவோம் என தமிழ் ராக்கர்ஸ் தெரிவித்திருந்தது. சர்கார் படம் தொடர்பாக தமிழ்ராக்கர்ஸ் வெளியிட்டுள்ள சவாலை முறியடிப்போம் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அறிக்கை வெளியிட்டது. ஒவ்வொரு தியேட்டரிலும் இதற்காக தனி ஆட்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர்.
ஆனாலும் இன்று காலை தமிழ் ராக்கர்ஸ், சர்கார் படத்தின் எச்.டி.பிர்ண்ட் இன்றே வெளியாகும் என்று மீண்டும் ட்விட்டரில் பதிவு செய்தார்கள். இன்று மதியம் சர்கார் படம் இணைய தளத்தில் வெளியானது.
இதனால் சன் பிக்சர்ஸ் மற்றும் சர்கார் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.