#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"உங்களின் உடல் உறுப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும்" என கூறிய ரசிகருக்கு தக்க பதிலடி கொடுத்த டாப்சி!
தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ஆடுகளம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்சி. தனது அறிமுக படத்தில் சிறப்பான வரவேற்பினை பெற்ற டாப்சிக்கு அடுத்து நடித்த படங்கள் வரிசையாக தோல்வி அடைய இவருக்கு தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்தது.
ஆனாலும் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை டாப்சி.கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் அவரை தேடி வருகின்றன. இப்போது டாப்சி கைவசம் 4 இந்தி படங்கள் உள்ளன. இவர் தனது சினிமா பயணத்தை பற்றி மிகவும் ஓப்பனாக பேசியுள்ளார்.
படங்கள் தோற்றால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக அர்த்தம் இல்லை. ஒரு படம்தானே தோல்வி அடைந்தது என்று அடுத்த படத்துக்கு முயற்சி செய்வேன். சினிமா இல்லாவிட்டால் வாழ்க்கை போய்விடாது. வேறு ஏதாவது தொழில் செய்வேன் என சகஜமாக பேச கூடியவர் டாப்ஸி.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நடிகை டாப்ஸியை டாக் செய்த ரசிகர் ஒருவர் "உங்களின் உடல் உறுப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும்" என பதிவிட்டிருந்தார். பெரும்பாலும் இதுபோன்ற ட்வீட்டுகளை பிரபலங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் இதனை பார்த்த டாப்சி அப்படியே விட்டுவிடவில்லை.
Wow! I like them too. BTW which is your favourite ? Mine is the cerebrum. https://t.co/3k8YDbAL64
— taapsee pannu (@taapsee) December 17, 2018
அந்த ரசிகரை ட்வீட்டை ரீட்வீட் செய்த நடிகை டாப்சி "எனக்கும் என் உடலை மிகவும் பிடிக்கும்; எனக்கு அதிகமாக பிடிப்பது என் மூளையை தான். அப்படி உங்களுக்கு மிகவும் பிடித்த பாகம் எது?" என கேள்வி கேட்டு அனைவரும் பார்க்கும்படி அதனை பதிவிட்டிருந்தார். இதற்கும் சளைக்காமல் பதிலளித்துள்ள அந்த ரசிகர் "உங்களின் உதடு" என கூறியுள்ளார்.