எனக்கு அந்த எண்ணமே கிடையாது.. நடிகர் அர்ஜுன் மீது பதிலுக்கு குற்றம்சாட்டிய இளம் நடிகர்.! பரபரப்பில் திரையுலகம்!!

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அர்ஜுன். அவர் சில திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அவர் தெலுங்கில் தனது மகள் ஐஸ்வர்யாவை ஹீரோயினாக வைத்து படம் ஒன்றை இயக்குகிறார். இதில் ஹீரோவாக தெலுங்கு இளம் நடிகர் விஷ்வக் சேன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென அர்ஜுன், விஷ்வக் சேனைக்கு தொழில் பக்தி கிடையாது. அவரை போன்ற அர்ப்பணிப்பு இல்லாத நடிகரை நான் பார்த்ததே கிடையாது. 100 கோடி கொடுத்தாலும் இவர் போன்ற நடிகருடன் நான் பணிபுரிய மாட்டேன் என குற்றம்சாட்டி இருந்தார்.
இது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் இதுகுறித்து நடிகர் விஷ்வக் சேன், இதுவரை நான் பல படங்களில் நடித்துள்ளேன். எந்த படத்திலும் ஈடுபாடு இல்லாமல் பணிபுரிந்தது கிடையாது. என் மீது அர்ஜுன் சொன்ன குற்றச்சாட்டுகளை கேட்கும்போது இமய மலைக்கே சென்றுவிடலாம் போல உள்ளது. படத்தின் முதல் பாதி ஸ்கிரிப்ட் ஒரு வாரத்திற்கு முன்புதான் என்னிடம் கொடுக்கப்பட்டது.
அதுகுறித்து கருத்து கூறவோ, ஆலோசனை செய்யவோ எனக்கு சான்ஸ் கொடுக்கப்படவில்லை. அதனாலயே படப்பிடிப்புக்கு நான் செல்லவில்லை. நானாக படத்தில் இருந்து விலகவில்லை. அர்ஜுனை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. அவரது படம் நன்றாக வர வேண்டும் என விளக்கமளித்து வாழ்த்து கூறியுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.