சட்டப்பேரவையில் வேல்முருகன் ஆவேசம்; சபாநாயகருக்கு மிரட்டல்? நடவடிக்கை எடுக்க முதல்வர் வலியுறுத்தல்.!



tvk-velmurugan-anger-with-speaker-appavu

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம், கேள்வி நேரத்தின் போது, தமிழக வாழ்வுரிமை கழகத்தின் எம்.எல்.ஏ வேல்முருகன், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச அனுமதி வழங்க வேண்டுகோள் வைத்தார். அவருக்கு பேச அனுமதி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையும் படிங்க: கோவை எஸ்டிபிஐ கட்சி நிர்வாகியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை.!

வேல்முருகன் ஆவேசம்

இதனால் ஆவேசமான வேல்முருகன் சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்று முழக்கமிட்டார். இதனால் அதிருப்தியடைந்த சபாநாயகர், அவை உறுப்பினர் வேல்முருகன் அவை விதிகளை மீறி செயல்படுகிறார். சபாநாயகருக்கு மிரட்டல் விடுக்கிறார். திமுக கூட்டணியில் கலந்துகொண்டு வெற்றி பெற்று இருக்கிறார். அவருக்கு தவாக உறுப்பினராகவே இன்று வரை மதிப்பளிக்கப்படுகிறது. 

velmurugan

சபாநாயகர் இருக்கை முற்றுகை

வேல்முருகன் இப்படி நடந்துகொண்டது அதிகப்ரசங்கித்தனத்துடன் தெரிகிறது. விதியை மீறி செயல்பட கூடாது என சபாநாயகர் அப்பாவு கூறினார். அதனைத்தொடர்ந்து, அவை உறுப்பினர் வேல்முருகனின் மீது, சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் தன்னை திருத்திக்கொள்ளும் வகையில், இந்நடவடிக்கை அமைய வேண்டும்" என முதல்வர் முக ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஏழரை சனி எச்.ராஜா - அமைச்சர் சேகர் பாபு கடும் விமர்சனம்.!