#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீரென்று மீண்டும் மதம் மாறிய தாடி பாலாஜி! அவரே கூறிய அதிர்ச்சி காரணம்!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், பிரபலதொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிக்கு நடுவராகவும் இருப்பவர் தாடி பாலாஜி. இவர் சமீபத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெருமளவில் பிரபலமானார்..
இவர் தனது மனைவியை, கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு போஷிகா என்ற மகள் உள்ளார். மேலும் கடந்த வருடங்களில் தாடி பாலாஜியின் மீது பல தவறான விமர்சனங்கள் எழுந்தது. பின்னர் நாளடைவில் அந்த விமர்சனங்கள் மாறியது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தாடி பாலாஜி மன நிம்மதியை தேடி மதம் மாறியதாக செய்திகள் வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அவர் தனது தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்புயுள்ளாராம்.
இதுகுறித்து அவரோ, நம்முடைய கலாச்சாரம், வரலாறு ஆகியவற்றை இழந்து அடிமை போல் இருக்க வேண்டிய நிலை உருவானதால் தாய் மதம் திரும்பியதாக தெரிவித்துள்ளார்.