#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விரைவில் இது நடக்கும்.! நடிகர் தாடி பாலாஜி எடுத்துள்ள அதிரடி முடிவு!! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் தாடி பாலாஜி. அவர் சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பெரும் பிரபலமாக இருந்து வருகிறார்.
பிளஸ்-2 பொதுத்தேர்விற்கான முடிவுகள் அண்மையில் வெளிவந்தது. இதில் திண்டுக்கல் மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்தார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் தாடி பாலாஜி தமிழ்மொழி பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்த அரக்கோணத்தைச் சேர்ந்த மாணவி லக்ஷயா ஸ்ரீயை அவரது வீட்டிற்கு நேரில் சென்று பாராட்டியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவி லக்ஷயா ஸ்ரீயை நேரில் சந்தித்து வாழ்த்தினேன். அவரது கல்விக்கான உதவிகளை நான் செய்வதாக கூறியுள்ளேன். தமிழக அரசும், அமைச்சர் அன்பில் மகேஷும் மாணவர்களுக்காக பலவிதமான நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்.
மேலும் விரைவில் நான் அரசியலில் நுழைவேன். அவ்வாறு அரசியலுக்குள் வந்தால் பல நல்ல விஷயங்களை செய்வேன். தனி கட்சி ஆரம்பிக்கும் எண்ணமில்லை. எனக்கான சரியான அங்கீகாரம் எங்கு கிடைக்குமோ அந்த இடத்தில் வேலை செய்ய நான் தயாராக உள்ளேன் என்று தாடி பாலாஜி கூறியுள்ளார். இந்நிலையில் அவர் எந்த கட்சியில் இணைவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.