#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தாடி பாலாஜிக்கே தெரியாமல் அரசியலில் குதித்த பாலாஜியின் மனைவி!!
பிரபல திரைப்பட நடிகரான பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் சமீபகாலமாக பிரச்சனை ஏற்பட்டு வந்ததால், நித்யா கணவரை விட்டு பிரிய முடிவு செய்தார்.
இதைத் தொடர்ந்து பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக நித்யாவும், பாலாஜியும் சென்றனர். அதன் மூலம் இருவரும் பிரபலமானர்.
தாடி பாலாஜியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்ட பொழுதே சமூகசேவை பணிகளில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார் நித்தியா. அப்போது பெண்களுக்கு எதிராக நடக்கும் அராஜகங்களை தட்டிக்கேட்க பாடுபடுவதாக பேசியிருந்தார் .
இப்போது இவரும் இன்னும் சில பெண்களும் சேர்ந்து ஒரு தேசிய பெண்கள் கட்சியை ஆரம்பித்துள்ளார்கள்.கட்சியின் நோக்கம் குறித்து கூறுகையில், இதன் நோக்கம், பெண் கல்வி, பெண்களுக்கான அதிகாரம் மட்டுமில்லாமல், இளம் பெண்களையும் அரசியலில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்துவதற்காக ஒரு அரசியல் பள்ளியையும் உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.
இந்த கட்சிதான் இந்தியாவில் பெண்களுக்கான முதல் அரசியல் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்சியின் மூலம் பிறருக்கு உதவ முடியும் என்றால் நான் கண்டிப்பாக தேர்தலில் நிற்பேன் என்றும், இது குறித்து கணவர் பாலாஜியிடம் சொல்லவிட்டேர்களா என்ற போது, இதைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.