#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இளைஞருடன் அடிதடியில் ஈடுபட்ட நடிகர் தாடி பாலாஜியின் மனைவி நித்யா.! என்ன நடந்தது? கிளம்பிய புது சர்ச்சை!!
சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும், நடுவராகவும் கலந்துகொண்டு காமெடியில் பிரபலமாக இருப்பவர் தாடி பாலாஜி. இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும், குணச்சித்திர ரோலிலும் நடித்துள்ளார். இவர் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு ஒரு மகள் உள்ள நிலையில் குடும்ப பிரச்சினை, கருத்து வேறுபாடு காரணமாக பல சர்ச்சைகளுக்கு பிறகு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நித்யா தன் மகளோடு தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் நித்யாவிடம் மாதவரம் பொன்னியம்மன் மேடு நகரில் வசித்து வரும் கலைச்செல்வன் என்ற வாலிபர் ரூபாய் 94 ஆயிரம் கடனாக வாங்கியுள்ளார்.
இதில் 52 ஆயிரத்தை மட்டும் கொடுத்துவிட்டு, மீதி பணத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மீதமுள்ள கடன் தொகையை திரும்ப பெறுவதற்காக நித்யா அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறி இருவரும் அடிதடியில் இறங்கியுள்ளனர்.
அப்பொழுது இருவரும் மாறி மாறி தாக்கிக் கொண்டதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்த நிலையில் இதுக்குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.