#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் தாடி பாலஜியின் மனைவி நித்யா! இதுதான் கட்சியின் நோக்கமாம்!
தமிழ் சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர் தாடி பாலாஜி. சினிமாவில் நல்ல வரவேற்பு இருந்தாலும், சில வருடங்களாக எந்த சினிமாவிலும் வாய்ப்பு இலாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார் பாலாஜி. பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்நிலையில் நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் தாடி பாலாஜி. இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. பாலாஜிக்கு, அவரது மனைவி நித்யாவுக்கும் நடந்த குடும்ப சண்டை ஊருக்கே தெரிந்த விஷயம். ஒருவழியாக பிக் பாஸ் போட்டிக்கு சென்ற இவர்கள் ராசியாகிவிட்டதாக கூறப்பட்டது.
தற்போது தனது கணவன் பாலாஜிக்கே தெரியாமல் புதிய அரசியல் கட்சி ஒன்றில் இணைந்துள்ளார் தாடி பாலாஜியின் மனைவி நித்யா. அது ஒரு தேசிய பெண்கள் கட்சியாம்.
கட்சியின் நோக்கம் குறித்து கூறுகையில், இதன் நோக்கம், பெண் கல்வி, பெண்களுக்கான அதிகாரம் மட்டுமில்லாமல், இளம் பெண்களையும் அரசியலில் ஈடுபடுவதற்கு ஊக்கப்படுத்துவதற்காக ஒரு அரசியல் பள்ளியையும் உருவாக்கும் திட்டத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.