அது தள்ளிபோனா போகட்டும்.. வலிமை ஏமாற்றத்தில் இருந்த தல ரசிகர்களை, குஷியாக்கிய தல 61! வெளியான சூப்பர் மாஸ் தகவல்!!



thala-61-movie-update-leaked

தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் மாஸ் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் தல அஜித். இவருக்கென நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் இவரது பிறந்தநாளை ரசிகர்கள் திருவிழாவை போல கோலாகலமாக கொண்டாடுவர்.

தல அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன் அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருந்த நிலையில் படக்குழு மே 1 அஜித் பிறந்த நாளன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவித்திருந்தது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு தள்ளிப் போவதாக அறிவிப்பு வெளியானது. இதனால் தல ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

Valimai

இந்த நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அஜித் அடுத்ததாக மீண்டும் மூன்றாவது முறையாக இயக்குனர் ஹெச் வினோத்துடன் கூட்டணியில் இணைந்து, போனி கபூர் தயாரிப்பில் தல 61 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.