#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. தேசிய விருது வாங்கிய படத்தில் தல அஜித்! வெளியான தகவல்!
இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில் தல அஜித் நடிக்கும் அடுத்தபடம் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது. ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்து ஹிட்டான திரைப்படம் பிங்க். தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது இந்த திரைப்படம். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் அஜித் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குநர் எச்.வினோத் இந்த படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழில் ரீமேக்காகும் இந்த படத்தில் நடிகர் அமிதாப்பச்சன் கதாபாத்திரத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளார். இந்த தகவலை ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த படத்தின் கிரியேட்டிவ் புரொட்யூஷர் சூஜித் சிர்கார் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும், மேலும் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர்தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. தீரன் பட இயக்குநரின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை அடுத்த வருடம் வெளியிட படக்குழு திட்டமிட்டி இருப்பதாக தெரிகிறது.