"எந்த ஆட்ட நாயகனாலும் எங்ககிட்ட ஆட்ட(ம்) முடியாது" - தளபதி ரசிகர்களை சீண்டும் தல ரசிகர்கள்..! 



thala fans irritiating thalapathy fans

 

எச்.வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில் உருவாகிய துணிவு திரைப்படமும், வம்சி இயக்கத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு திரைப்படமும் பொங்கல் கொண்டாட்டங்களாக திரையரங்குகளில் வெளியாகிறது. 

thalapathy fans

முதலில் ஒருநாள் இடைவெளியில் வாரிசு திரைப்படம் வெளியாவதாக தெரிவித்திருந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வாரிசு மற்றும் துணிவு படங்கள் ஒரேநாளில் வெளியாவது உறுதி செய்யப்பட்டது. இதனால் தல - தளபதி ரசிகர்கள் இருவரும் சமூக வலைதளங்களில் உச்சகட்ட சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருவரும் கருத்து ரீதியாக கடுமையாக மோதி வருகின்றனர். 

இந்த நிலையில், திருச்சி மத்தியபேருந்து நிலையத்திற்கு அருகே தன்னம்பிக்கை தல குரூப்ஸ் திருச்சி என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், "எந்த ஆட்ட நாயகனாலும் எங்ககிட்ட ஆட்ட(ம்) முடியாது" என்று துணிவு படத்திற்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் வைரலாக சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.