#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி 66ல் ராஷ்மிகா எப்படியான ரோலில் நடிக்கிறார் தெரியுமா... வெளியான புதிய தகவல்!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த சில தினங்களாக ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக் ஆகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இந்நிலையில் புதிய தகவலாக தளபதி 66 படத்தில் ராஷ்மிகா என்ன மாறியான ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தளபதி 66ல் ராஷ்மிகா சுயநலம் மிக்க, தலைக்கனம் அதிகமாக இருக்கும் பெண் ரோலில் தான் நடித்து வருகிறார். இதுவரை அவர் அப்படி ஒரு ரோலில் நடித்ததே இல்லை என்பதால் கஷ்டப்பட்டு நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.