பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
மாஸ் காட்டும் தளபதி 63; அடேங்கப்பா சாட்டிலைட் உரிமம் இத்தனை கோடியா.!
தமிழில் பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவருக்கென இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.மேலும் இவரது படம் வெளியாகும் நாட்கள் மற்றும் இவரது பிறந்தநாளை கோலாகலமாக திருவிழாவை போல கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து விஜய் 63 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்தப் படத்திற்கான சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் டிவி ரூ. 50 கோடிக்கு வாங்கி இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமம் ரூ. 25 கோடிக்கும், இந்தி சாட்டிலைட் உரிமம் ரூ. 30 கோடிக்கும் மேல் விற்று இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தமாக பார்க்கும்போது எப்படியும் படம் வெளியாகும் முன்பே ரூ. 100 கோடிக்கு மேல் குவித்து இருப்பதாக கூறப்படுகிறது.