தமன்னா தமிழ் பேசி கேட்ருக்கீங்களா.? அழகுத் தமிழில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட தமன்னா..!



thamanna-tamil-speaking-corono-awareness-video

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. வியாபாரி, கல்லூரி போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான இவர் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிபடங்களில் முன்னணி நடிகையாக உள்ளார். மேலும், விஜய், அஜித், சூர்யா என பல்வேறு பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகையாக இருந்தாலும் தமன்னா இதுவரை தமிழ் படங்களில் சொந்த குரலில் பேசிய கிடையாது. மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் பெரும்பாலும் ஆங்கிலம் அல்லது வேறு மொழிகளில்தான் அதிகம் பேசுவார். இந்நிலையில் தமன்னா தமிழில் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோ ஓன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

corono

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என அனவைரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். மேலும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது சில விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டுவருகின்றனர்.

அந்த வகையில் கொரோனா சம்மந்தமாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழில் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார் தமன்னா. இதோ அந்த வீடியோ.