#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதலரோடு ஊர் சுற்றும் தமன்னா.. வைரல் புகைப்படங்கள்.!
தமிழ் சினிமாவில் கேடி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் தமன்னா. இந்த திரைப்படம் பெரிய அளவில் இவருக்கு கை கொடுக்கவில்லை என்றாலும், அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
இதனிடையே தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதில், இவர் பாகுபலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் பிரபல நடிகையானார். தற்போது ஹிந்தியில் பிசியான நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார்.
தற்போது 33 வயதாகும் தமன்னா எப்போது திருமணம் என்று கேட்டால் ஏதாவது காரணம் சொல்லி தட்டி கழித்து வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவோடு காதலில் உள்ளதாகவும் விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் தனது காதலர் விஜய் வர்மாவுடன் ஜாலியாக ஊர் சுற்றி புகைப்படங்களை எடுத்து வருகிறார். அந்த வகையில் நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.