#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"சார்பட்டா படத்தை விட 100 மடங்கு நல்ல படமாக தங்கலான் உருவாகும்" நடிகர் விக்ரமின் சர்ச்சை பேச்சு..
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவர் தமிழில் பல ஹிட் திரைப்படங்களை அளித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். மேலும் தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி இருக்கிறார் விக்ரம்.
விக்ரம் நடிக்கும் திரைப்படங்கள் வித்தியாசமான கதைகளத்தைக் கொண்டிருப்பதால் இவர் நடிப்பிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும் தனது நடிப்பு திறமையின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இடம்பெற்றுள்ளார்.
இது போன்ற நிலையில், பொன்னியின் செல்வன் படத்திற்கு பின் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தங்கலான். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் விக்ரமின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
விக்ரம் பேசியதாவது, "தங்கலான் திரைப்படத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உள்ளேன். ஆனால் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்தாலும் அடுத்த நாள் படப்பிடிப்பின் போது உற்சாகமாகிவிடும். இதற்குக் காரணம் பா ரஞ்சித் தான். இவரின் இயக்கத்தில் நடிப்பதே மிகவும் பெருமையாக உணர்கிறேன். மேலும் சார்பட்டா படத்தை விட 100 மடங்கு தங்கலான் திரைப்படம் நல்ல படமாக உருவாகும். அந்த அளவிற்கு தனது உழைப்பை இயக்குனர் இப்படத்தில் போட்டிருக்கிறார்" என்று விக்ரம் கூறியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.