கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
17 வயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை.!! போக்சோவில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி.!!
தஞ்சை மாவட்டத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக கட்சியின் ஐடி-விங் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த நபர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறை விசாரணை நடத்தி வருகிறது.
அதிமுக ஐடி-விங் பொறுப்பாளர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த பண்ணவயல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் தீபன்(33). இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது சிறப்பான பணியை பாராட்டி அதிமுக கட்சி நிர்வாகம் இவருக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணியின் இணைச் செயலாளர் பதவியை வழங்கியது.
17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
இந்நிலையில் அதிமுக கட்சி நிர்வாகி தீபன் அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
இதையும் படிங்க: "அங்கிள் வேண்டாம் ப்ளீஸ்.." +2 மாணவிக்கு பாலியல் தொந்தரவு.!! போலீஸ்காரர் கைது.!!
போக்சோ வழக்கு
இந்த விசாரணையை தொடர்ந்து தீபனை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையிலடைத்தனர். பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: குலுங்கிய கார்., தறிகெட்ட வேகம்.. தேவர் குருபூஜைக்கு காரில் அதகளம் செய்து பயணம்.! பகீர் வீடியோ.!