பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அச்சோ.. கொடூர கொலைகாரனான தனுஷ்! வேற லெவல் சம்பவம் இருக்கு! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து, பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டு இந்தியளவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் தனுஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்த தனுஷ் தற்போது ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். தனுஷ் ஹாலிவுட்டில் தி கிரே மேன் என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ சகோதரர்கள் இயக்கியுள்ளனர். மேலும் இதில் ரியான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். தி கிரே மேன் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 22-ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அண்மையில் வெளிவந்த இதன் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் தனுஷ் கொடூர கொலைகாரனாக நடித்துள்ளாராம். இதுகுறித்து அவர் கூறுகையில், எப்பொழுதுமே மோசமானவனாக நடிப்பது கொஞ்சம் ஜாலியாக இருக்கும். தனது அவிக் சான் கதாபாத்திரத்திற்காக இயக்குனர்கள் அருமையான கதையை உருவாக்கியுள்ளனர்
ஏழ்மையான பின்னணியைச் சேர்ந்த அவிக் சான் எப்படி கொலைகாரன் ஆனான் என்பதே கதை. அவன் அனாவசியமாக யாரையும் கொலை மாட்டான். அவனைப் பொறுத்தவரை அவன் நேர்மையான, மரியாதைக்குரிய மனிதன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் தி கிரே மேன் படத்திற்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.