பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
முடிஞ்சாச்சு.. குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி! எகிறும் எதிர்பார்ப்பு!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டான குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் குக்காக, போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தர்ஷா குப்தா. அவர் சில சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தர்ஷா குப்தாவுக்கு ருத்ரதாண்டவம் என்ற படத்தில் முக்கிய ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்படத்தை திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் ஹீரோவாக திரௌபதி பட நடிகரான ரிச்சர்ட் ரிஷி நடிக்கிறார். மேலும் ருத்ரதாண்டவம் படத்திற்கு ஜுபின் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் அவை முடிவடைந்து, படம் வெளியீட்டுக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
RudraThandavam female lead @DharshaGupta finished her dubbing portions recently.. pic.twitter.com/pXJtDCUen4
— Mohan G Kshatriyan 🔥 (@mohandreamer) May 10, 2021
இந்த நிலையில் தற்போது தர்ஷா குப்தா தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணிகளை முடித்துள்ளார். இதுகுறித்து மோகன்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் அப்பொழுது தர்ஷா உடன் எடுத்த செல்பி புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் ரசிகர்களிடையே இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.