பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
தல பாடலுக்கு கெத்தாக குத்தாட்டம் போட்ட தர்ஷன்.! இணையத்தில் லீக்காகி தீயாய் பரவும் வீடியோ!!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் இலங்கையைச் சேர்ந்த விளம்பர மாடலான தர்ஷன். மேலும் தனது நேர்மையான குணத்தாலும், வெளிப்படையான பேச்சாலும் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.
மேலும் இவர்தான் பிக்பாஸ் இறுதி கட்டத்திற்கு சென்று பிக்பாஸ் பட்டத்தை தட்டிச் செல்வார் என ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்த நிலையில் குறைந்த வாக்குகளைப்பெற்று பிக்பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறினார். இது போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததை தொடர்ந்து சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அதில் பிக்பாஸ் போட்டியாளர்கள் பலரும் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் லீக்காகி வந்தது. இந்நிலையில் தற்போது தர்ஷன் தல அஜித்தின் பாடலுக்கு நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.