#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் விவேக் கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் இறந்ததாக பரபரப்பு புகார்.!விசாரணைக்கு எடுத்துக் கொண்ட தேசிய மனித உரிமை ஆணையம்.!
நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்று கொண்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம், சூர்யா என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை பலருடன் இணைந்து நடித்திருந்தார். கடந்த ஏப்ரல் 16-ம் தேதி மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நடிகர் விவேக் எப்படியாவது மீண்டு வந்துவிடுவார் என திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், ஏப்ரல் 17-ம் தேதி காலை காலமானார். 58 வயதான விவேக்கின் அந்த திடீர் மரணம், ரசிகர்களையும், திரையுலகினரையும் மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்தநிலையில் விவேக் இறப்பதற்கு முந்தைய நாள் தான் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார். இதையடுத்து அவர் மரணத்துக்கும், தடுபூசிக்கும் சம்மந்தம் இருக்குமா என பலரும் கேள்வியெழுப்ப தொடங்கினர். பின்னர் விவேக், அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கே நேரடியாகச் சென்று, விவேக் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருப்பதற்கும், அவர் தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று மருத்துவர்கள் முன்னிலையில் பேட்டியளித்தார் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.
இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், விவேக் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் தான் மரணமடைந்ததாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை விசாரணைக்கு ஏற்பதாக தேசிய மனித உரிமை ஆணையம் அறிவித்துள்ளது.