மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
தேவேந்திர பட்னாவிசை நேரில் சந்தித்த தி சபர்மதி ரிப்போர்ட் படக்குழு.!
அவினாஷ் அர்ஜுன் எழுத்தில், ரஞ்சன் இயக்கத்தில், பாலாஜி மோகன் பிக்சர்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தி சபர்மதி ரிப்போர்ட் (The Sabarmathi Report). குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ம் ஆண்டு இரயில் எரிக்கப்பட்டது தொடர்பான கதையம்சத்துடன் இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.
பல சர்ச்சைகளுக்கு பின் வெளியானது
நடிகர்கள் விக்ராந்த், ராசி கண்ணா, ரீதி தோக்ரா, பர்கா சிங் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக வெளியாகியுள்ள இப்படம், பல்வேறு சர்ச்சைகளுக்கு பின்னர் 15 நவம்பர் 2024 அன்று, பல மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. இப்படத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு என சர்ச்சைகளில் சூழ்ந்து வருகிறது.
இதையும் படிங்க: ஆங்கில மொழியில் வெளியாகும் விடாமுயற்சி., அசத்தல் டீசர் வெளியீடு.!
மஹாராஷ்ட்ராவின் மூத்த அரசியல் தலைவருடன் சந்திப்பு
இந்நிலையில், திரைபடக்குழுவினர் மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வர் என எதிர்பார்க்கப்படும் பாஜகவின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிசை நேரில் சந்தித்தனர். இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஏனெனில், சர்ச்சைகளுக்கு மத்தியில் படக்குழு அரசியல் தலைவர்களை சந்தித்துள்ளது, மறைமுகமாக படத்துக்கான ஆதரவு என பேசப்படுகிறது.
இதையும் படிங்க: அட்டகாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள பேமிலி படம்; வெளியீடு தேதி அறிவிப்பு..!