ஆங்கில மொழியில் வெளியாகும் விடாமுயற்சி., அசத்தல் டீசர் வெளியீடு.!



Vidaamuyarchi English Teaser Out Now 

மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா ப்ரொடக்சன்ஸ் தயாரிப்பில், நடிகர்கள் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன் சர்ஜா, ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி (Vidaamuyarchi).

இப்படம் வரும் 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. படத்தின் இசையமைப்பு பணிகளை அனிரூத் ரவிச்சந்தரும், ஒளிப்பதிவு பணிகளை ஓம் பிரகாஷ், நீரவ் ஷா ஆகியோரும் மேற்கொண்டுள்ளனர். எடிட்டிங் பணிகளை என்.பி ஸ்ரீகாந்த் மேற்கொண்டுள்ளார்.

ஓடிடி, டிவி வெளியீடு உரிமை

பலகோடி பொருட்செலவில் எடுக்கப்படும் திரைப்படம் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தால் ரூ.100 கோடி கொடுத்து ஓடிடி உரிமையை பெற்றுள்ளது. சன் தொலைக்காட்சி நிறுவனம் தொலைக்காட்சி உரிமையையும் கைப்பற்றி இருக்கிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் படம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தால் வெளியிடப்படுகிறது.

இதையும் படிங்க: அட்டகாசமான கதையம்சத்துடன் உருவாகியுள்ள பேமிலி படம்; வெளியீடு தேதி அறிவிப்பு..!

ஆங்கில டீசர்

இந்நிலையில், ஆங்கில மொழியிலும் விடாமுயற்சி படம் வெளியாக படக்குழு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதன் முதற்கட்டமாக ஆங்கில மொழியில் உருவாகிய படத்தின் டீசர் காட்சிகள் வெளியாகியுள்ளன. 

விடாமுயற்சி படத்தின் ஆங்கில மொழி டீசர்

இதையும் படிங்க: Baakiyalakshmi: "நான் கல்யாணமே பண்ணிருக்ககூடாது" - கலங்கிபோன ராதிகாவுக்கு ஆறுதல் கூறும் பாக்கியா.!