கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கரம்; ஹெல்மட் அணியாததால் இரண்டு பேர் பலி.!
அதிவேகமாக வந்த இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு ஏற்பட்ட விபத்தில், இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, பிரதான சாலை கடமலைக்குண்டு பகுதியில் இன்று பயங்கர விபத்து ஒன்று நடந்தது. பாலூத்து கிராமத்தில் வசித்து வரும் வேல்முருகன், தனது நண்பரான மாலியன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தார்.
இதையும் படிங்க: மாமல்லபுரம்: விபத்தில் உயிரிழந்த காதலி, அடுத்த நொடியே பேருந்து முன் பாய்ந்து காதலனும் தற்கொலை..!
அப்போது, எதிர் திசையில் பிரதீப் என்ற சிறுவன் இருசக்கர வாகனத்தை இயக்கி வந்ததாக தெரிய வருகிறது. இவர்கள் மூவரும் தலைக்கவசம் அணியாத நிலையில், 16 வயதுடைய சிறுவன் பிரதீப் அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியதாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கி சோகம்
மேலும், வேல்முருகனும் மாலியனுடன் பேசிக்கொண்டே கவனக்குறைவாக வாகனத்தை இருக்கிறார். இதனிடையே, இவர்களின் வாகனம் கடமலைக்குண்டு பகுதியில் வந்தபோது, எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி இருக்கின்றனர்.
இந்த விபத்தில் தலைக்கவசம் அணியாதவர்களில் வேல்முருகன், பிரதீப் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துவிட்டனர். தலையில் பலத்த காயமடைந்த மாலியன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிவேகத்தில் வாகனத்தை இயக்கியதும், தலைக்கவசம் அணியாததுமே விபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதையும் படிங்க: அடுத்தடுத்து ஒரே இடத்தில் நடந்த விபத்து.. தாய், தந்தை, மகன் விபத்தில் பலி.. நிர்கதியாய் 2 மகன்கள்.. உதவி கேட்டு கோரிக்கை.!