கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
அடுத்தடுத்து ஒரே இடத்தில் நடந்த விபத்து.. தாய், தந்தை, மகன் விபத்தில் பலி.. நிர்கதியாய் 2 மகன்கள்.. உதவி கேட்டு கோரிக்கை.!
மூத்த மகன் இறந்த 2 ஆண்டுகளில், மகன் இறந்த அதே இடத்தில் தாய்-தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மணி (வயது 48). இவரின் மனைவி கவிதா (வயது 43). மணி பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாகவும், கவிதா மரக்கடையில் கூலித் தொழிலாளியாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.
இதனிடையே, கடந்த மாதம் 25ம் தேதி இருசக்கர வாகனத்தில் தம்பதிகள் சென்றபோது, கோவில்வழி பாதையில் நாய் குறுக்கே புகுந்ததால் இருவரும் சாலையில் விழுந்தனர். தம்பதிகளுக்கு பின்னால் டிப்பர் லாரி வந்ததால், இருவரும் லாரியில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் விழிப்புணர்வு; "தலைக்கவசம் அணியுங்க" - துக்கத்திலும் சமூக சேவையில் உறவினர்கள்.!
2 மகன்களும் அனாதையானதால் சோகம்
தம்பதிகள் உயிரிழந்த அதே இடத்தில தான், தம்பதிகளின் மூத்த மகனான கமலேஷ் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அந்த துயரம் நடந்து 2 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போது தம்பதிகள் இருவரும் உயிரிழந்தனர். இதனால் பெற்றோர், சகோதரனை இழந்த தம்பதியின் 2 மகன்கள் நிர்கதியாய் தவித்து வருகின்றனர்.
19 வயதுடைய ஸ்ரீராம் தனியார் கல்லூரியில் பிகாம்ம்ம் பயின்று வருகிறார். இவருக்கு காது பிரச்சனை, சிறுநீரகம் & இதய பாதிப்பு இருக்கிறது. இதற்காக சிகிச்சை பெறுகிறார். கடைக்குட்டி மகன் ஆகாஷ் அரசுப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயில்கிறார். இவர்கள் பாட்டியின் பராமரிப்பில் இருக்கும் நிலையில், அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடி இருக்கின்றனர்.
நல்லுள்ளம் கொண்டோர் உதவிட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ-வின் உதவியாளர் விபத்தில் மரணம்; டூ-வீலரில் நிலைதடுமாறி விழுந்து சோகம்.!