#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தேனிசை தென்றலில் நனைந்து மகிழ தயாரா? கோவை வாசிகளே கொண்டாடுங்க.. விபரம் உள்ளே.!
தமிழ் திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளராக வலம்வந்துள்ள தேவா, முந்தைய காலங்களில் காலத்தால் அழியாத பல பாடல்களை கொடுத்து இருக்கிறார்.
தேவாவின் இசை பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பிய காலங்கள் காலத்தால் அழிக்க இயலாதவை ஆகும். தற்போது தேனிசை தென்றல் தேவா பெரியளவில் படங்களில் இணைந்து பணியாற்றாமல் இருக்கிறார்.
இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா முதல் முறையாக கோவையில் நடைபெறும் இசை கச்சேரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, ரசிகர்களுக்காக நேரில் பாடல் பாடுகிறார்.
இந்த இசைக்கச்சேரிக்கான விளம்பரங்கள் தற்போது தேவா மேடையில் பாடுவதை உறுதி செய்துள்ளது. 15 ஜூன் 2024 அன்று, கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறும் கச்சேரியில் அவர் கோவையில் கலந்துகொள்கிறார்.