பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
விரைவில் முடிவுக்கு வரவிருக்கும் விஜய் டிவியின் பிரபல சீரியல்! இதுதான் காரணமா? ஷாக்கான ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் மக்களிடம் எதிர்பார்ப்பை கூட்டும் வகையில் சுவாரசியங்களுடனும், அதிரடி திருப்பங்களுடன் ஏராளமான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு மிகவும் ஜாலியாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வந்த தொடர் தேன்மொழி BA. இரவு ஒளிபரப்பாகி வந்த இத்தொடருக்கென ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்த தொடரில் விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த ஜாக்குலின் முக்கிய கதாபாத்திரத்தில், கதாநாயகியாக நடித்தார். இதில் இவரது நடிப்பு மிகவும் கலகலப்பாகவும், அனைவரும் ரசிக்கும் வகையில் எதார்த்தமாகவும் அமைந்தது. மேலும் இந்த தொடரில் ஹீரோவாக அருள் என்ற கதாபாத்திரத்தில் சித்தார்த் நடித்திருந்தார்.
450 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வரப் போவதாக தற்போது தகவல்கள் பரவி வருகிறது. மேலும் பிக்பாஸ் சீசன் 5 விரைவில் தொடங்கப்பட உள்ளதால் சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.