#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நெடு நெடுனு வளர்ந்து ஹீரோயின் போல் மாறிய தெறி பேபி நைனிகா! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க!
பிரபல நடிகை மீனாவின் மகளும், தெறி படத்தில் தளபதி விஜய்க்கு மகளாக நடித்த பேபி நைனிகாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகைகளில் ஒருவர் மீனா. 90 ஸ் ஹிட்ஸ்களின் மிகவும் பேவரைட் நடிகைகளில் இவரும் ஒருவர் என்றே கூறலாம். சினிமாவில் கொடிகட்டிப்பறந்த இவர் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் தனது மகள் நைனிகாவை சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கேற்ப, நைனிகாவும் தனது முதல் படத்திலையே தனது அபாரமான நடிப்பு திறமையினால் ரசிகர்களின் பேராதரவை பெற்றார். தெறி படத்தை அடுத்து நடிகர் அரவிந்த்சாமி நடித்த "பாஸ்கர் ஒரு ராஸ்கல்" என்ற படத்திலும் முக்கிய கதாபாரத்தில் நடித்திருந்தார் நைனிகா.
அதன்பிறகு பெரிதாக இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை என்றாலும், இவர் நிச்சயம் விரைவில் கதாநாயகியாக அறிமுகமானலும் ஆச்சரிப்பட ஒன்றும் இல்லை என ரசிகர்கள் கூறிவந்தனர். அதற்கேற்றாற்போல் நைனிகாவின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.
தெறி படத்தில் குட்டி குழந்தையாக இருந்த நைனிகா தற்போது நெடுநெடுவென வளர்ந்து, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் அழகாக மாறியுள்ளார். நிச்சயம் இவர் கதாநாயகியாக மாறிவிடுவர் என ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் செய்துவருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.
National Daughters Day ☺️🥰❤️#meena #nainika #nationaldaughtersday pic.twitter.com/wg5WoAM1DA
— Meena (@ActressMeena_FP) September 27, 2020