#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா? வெளியான தகவல்..
பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 5 தொடங்கி நாளுக்கு நாள் மிகவும் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் சென்று கொண்டுள்ளது. இதில் 18 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில், ஒவ்வொரு வாரமும் ஒவ்வோரு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம் பாப் பாடகியும் மருத்துவருமான ஜக்கி பெரி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். நாளுக்கு நாள், யாரும் எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் சிபி, வருண், அபிஷேக், பிரியங்கா, இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரைச்செல்வி, பாவனி, அபினய் மற்றும் ராஜூ ஆகிய 10 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
அதில் அபிஷேக், அபினய் மற்றும் வருண் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மிகவும் குறைந்த வாக்குகள் பெற்று டேஞ்சர் சோனில் இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் தற்போது வெளியாகியுள்ள தகவலில், வைல்டு கார்டு போட்டியாளராக உள்ளே வந்து, மீண்டும் பல விஷயங்களில் வாயை விட்டு சிக்கிய அபிஷேக் தான் வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது.