#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொது இடத்தில் துருவ் விக்ரம் செய்த காரியம்! அதிர்ச்சியில் மூழ்கிய சீயான் ரசிகர்! வைரலாகும் புகைப்படம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறப்பவர் சீயான் விக்ரம். தனது உடலை வருத்தி படத்தின் கதைக்கு ஏற்றார் போல் தனது தோற்றத்தை கொண்டுவருவதில் இவருக்கு இணை இவரே. மேலும் சேது, தெய்வ திருமகள் சங்கர் இயக்கத்தில் உருவான ஐ போன்ற படங்களில் இவர் பல்வேறு வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். மேலும் அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வியப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விக்ரம் தற்போது டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் மாபெரும் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக கே.ஜி.எப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார். நடிகர் விக்ரமுக்கு ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
நடிகர் விக்ரமின் மகன் துருவ். இவர் சமீபத்தில் வெளிவந்த ஆதித்ய வர்மா என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவு வரவேற்பை பெற்றது. மேலும் அவருக்கு விக்ரம் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு அளித்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் துருவ் பொது இடத்தில் விக்ரம் ரசிகர் ஒருவரை சந்தித்துள்ளார். ஆட்டோ டிரைவரான அவர் தனது ஆட்டோவின் கண்ணாடியில் ஸ்கெட்ச் பட விக்ரமின் புகைப்படத்தை ஒட்டியிருந்தார். இந்நிலையில் துருவ் அந்த ஆட்டோவின் அருகேயும், ரசிகருடனும் நின்று புகைப்படம் எடுத்துள்ளார். இந்நிலையில் அதனை மிகவும் ஆச்சரியத்துடன் அந்த ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
@DhruvVikram8 இந்த அளவுக்கு இருப்பாப்புல-ன்டு நெனச்சே பாக்கல♥️🤗
— SaravanaAnandhCVF (@jsaravanaa28) January 3, 2020
த்ருவ் நீ வேற லெவல்யா😎 pic.twitter.com/gqf4WC1lqW