#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொன்னியின் செல்வன்.. ஆதித்த கரிகாலனின் ஆவேச டயலாக்கை வேத லெவலில் பேசி அசத்திய துருவ் விக்ரம்.! வைரல் வீடியோ!!
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவான திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், பார்த்திபன் என பெரும் நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்
இந்த திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இரு பாகங்களாக உருவான பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த 30ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.மேலும் வசூல் சாதனையும் படைத்து வருகிறது.
இந்த படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் மிகவும் அசத்தலாக நடித்துள்ளார். அவரது நடிப்பை கண்டு பலரும் பாராட்டினர். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் விக்ரமின் மகன் துருவ் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம் ஆவேசமாக பேசிய வசனத்தை வேற லெவலில் பேசி அசத்தியுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Dhruv Vikram making it bigger in stage with @chiyaan’s #AdithaKarikalan signature dialogues. pic.twitter.com/TauStUzhnr
— Venkatramanan (@VenkatRamanan_) October 16, 2022