மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
#Breaking: நெல்லையப்பர் கோவில் தேரோட்ட திருவிழா: நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவிலில், ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் என்பது நடைபெறுகிறது. இதில், ஆனி திருவிழா தேரோட்ட நிகழ்வுடன் வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படும் என்பதால், கொண்டாட்டங்களை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர்.
2024ம் ஆண்டுக்கான ஆனி தேரோட்ட திருவிழா ஜூன் 21ம் தேதி நடைபெறுகிறது. ஜூன் 13 ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இதனால் நான்கு ரத வீதிகளும் திருவிழா மற்றும் தேரோட்டத்திற்கு தயாராகி இருக்கின்றன.
இதையும் படிங்க: "200 கோடிக்கு சொத்து இருக்கு, 30 இலட்சத்துக்கு கொலை அவசியம் கிடையாது" - நெல்லை காங்கிரஸ் பிரமுகர் கொலை விவகாரத்தில் தகவல்.!
உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
450 டன் எடையுள்ள தேரை பக்தர்கள் தேரோட்டம் அன்று வடம்பிடித்து இழுத்து வருவார்கள். இதனால் அந்நாளில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது மாவட்டம் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த நெல்லையப்பரின் பக்தர்களும் திருநெல்வேலியில் வந்து குவிவார்கள்.
இந்நிலையில், தேரோட்டம் நடைபெறும் ஜூன் 23ம் தேதி திருநெல்வேலி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில், ஜூன் 29ம் தேதி பணிநாளாக செயல்படும் எனவும் ஆட்சியர் அலுவலகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காதலியின் கண்முன் காதலனை துள்ளத்துடிக்க கொலை செய்த கும்பல்; நெல்லையில் பகீர் சம்பவம்.!