கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் விழிப்புணர்வு; "தலைக்கவசம் அணியுங்க" - துக்கத்திலும் சமூக சேவையில் உறவினர்கள்.!
விபத்தில் உறவினர் உயிரிழந்துவிட, அதனை வைத்து சமூக கருத்தை விதைத்த சம்பவம் திருச்சியில் நடந்துள்ளது.
தலைக்கவசம் அணியாமல் பயணம்
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முதியவர் மாரியப்பன் (வயது 70). இவர் சம்பவத்தன்று தனது இருசக்கர வாகனத்தில், சரிவர, உரிய முறையில் தலைக்கவசம் அணியாமல் பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இருக்கிறார்.
இதையும் படிங்க: திமுக எம்.எல்.ஏ-வின் உதவியாளர் விபத்தில் மரணம்; டூ-வீலரில் நிலைதடுமாறி விழுந்து சோகம்.!
விபத்தில் சிக்கி பலி
இதனால் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதி செய்யப்பட்டவர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது அவரின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விஷயம் குறித்து காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விழிப்புணர்வு போஸ்டர்
இதனிடையே, விபத்தில் சிக்கி உயிரிழந்த மாரியப்பனைபோல, வேறு யாரும் உயிரிழக்கக்கூடாது என முடிவெடுத்தவர்கள், விழிப்புணர்வு பதாகையை வைத்துள்ளனர். அந்த பதிவில், சரிவர தலைக்கவசம் அணியாத காரணத்தால், மாரியப்பன் சிறு விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தலைக்கவசம் அணியுங்கள் என அவர் சிகிச்சையில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை பயன்படுத்தி பேனர் அச்சடித்து இருக்கின்றனர்.
சாலை விதிகளை மறக்க வேண்டாம்
சாலைகளை பொறுத்தமட்டில் விபத்து என்பது எங்கும் எப்போதும் என சாதாரணமாகிவிட்டது. ஆதலால், சாலை விதிகளை கடைபிடித்து, உயிர்பாதுகாப்பு கவசங்கள் அணிந்து பயணிப்பதே குறைந்தபட்சம் நமது உயிரை சேதாரமின்றி காக்க வழிவகை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத வாகனம் மோதி சோகம்; இளைஞர் பரிதாப பலி.!