கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பள்ளி வேன் ஓட்டுனருக்கு மாரடைப்பு; நொடியில் 20 மாணவ-மாணவிகளின் உயிரை காத்த நெகிழ்ச்சி சம்பவம்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம், வெள்ளகோவில் கே.பி.சி நகர் பகுதியில் வசித்து சேமலையப்பன் (வயது 49). இவர் வெள்ளகோவில் அய்யனூர் மெட்ரிக் பள்ளியில் வேன் ஓட்டுநராக 8 மாதமாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை நேரத்தில் பள்ளி முடிவடைந்த நிலையில், 20 குழந்தைகளை வீட்டில் கொண்டுசென்று விட வேனில் அழைத்து சென்றுள்ளனர். வேன் வெள்ளகோவில் பகுதியில், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டு இருந்தது.
இதையும் படிங்க: பாண்டிச்சேரி இன்பச்சுற்றுலா இறுதிச்சுற்றுலாவான சோகம்; ஐடி ஊழியர்கள் இருவர் பலி.!
ஓட்டுனருக்கு நெஞ்சு வலி
அச்சமயம் ஓட்டுநர் சேமலையப்பனுக்கு மாரடைப்பு ஏற்படவே, உயிர்போகும் தருணத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்தியவர் ஸ்டெரிங்கில் மயங்கி சரிந்தார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் அவரின் மனைவி லலிதா அலறவே, பொதுமக்கள் சேமலையப்பனை மீட்டு காங்கேயம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். இந்த விஷயம் அப்பகுதியில் தெரியவந்து, பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்தனர். மேலும், சேமலையப்பனின் உமா, ஜானகி ஆகிய மனைவிகள் உயிரிழந்துவிட, லலிதா என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
லலிதாவுக்கு ஹரிஹரன் (17), ஹரிணி (15) என இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள்
இதையும் படிங்க: செல்போன் வெடித்ததால் நடந்த சோகம்; டூ-வீலரில் சென்றவர் தலையில் படுகாயமடைந்து பலி.!