#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மறுபடியுமா?.. 47 வயதில் தன்னை விட 20 வயது குறைந்த பெண்ணை காதலிக்கும் பிரபல நடிகர்..! காதலுக்கு வயது ஒரு பொருட்டல்ல - ஓபன்டாக்..!!
இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான "டைட்டானிக்" படத்தில் நடித்து புகழ்பெற்ற நடிகரானவர் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ. இவர் இப்படத்தை தொடர்ந்து ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில், பல இளம் பெண்களுடன் லியோனார்டோ கிசுகிசுக்கப்பட்டு காதல் மன்னனாகவும் வலம்வந்தார்.
47 வயதான இவர், கடந்த 4 ஆண்டுகளாக தன்னைவிட 22 வயது குறைவான நடிகை கமிலா மோரோனை காதலித்துவந்தார். இவர்கள் இருவரும் ஒன்றாகவும் வாழ்ந்து வந்தனர். இவர்களது வயது வித்தியாசத்தை காரணமாக கொண்டு பல விமர்சனங்களும் எழுந்த நிலையில், காதலுக்கு வயது ஒரு பொருட்டல்ல என்று லியோனார்டோ பதிலளித்திருந்தார்.
அத்துடன் சமீபத்தில் இவர்களின் காதலில் முறிவு ஏற்பட்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இந்த நிலையில் புதிதாக லியோனார்டோ டிகாப்ரியோவுக்கும், 27 வயது மாடல் அழகி ஜிகிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக ஹாலிவுட்டில் தகவல் பரவியுள்ளது. மேலும் தன்னைவிட 20 வயது குறைந்த பெண்ணை மீண்டும் அவர் காதலிப்பது ஹாலிவுட்டில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.