2018 இல் தமிழ் சினிமாவை தெறிக்கவிட்ட டாப் ஐந்து இயக்குனர்கள் யார் யார்?



top-5-tamil-directors-2018

தமிழ் சினிமாவில் புது புது விஷயங்ளையும், முயற்சிகளையும் கொடுத்து வருகின்றனர் இன்றைய இயக்குனர்கள். தமிழ் சினிமாவை உலக தரத்திற்கு எடுத்து செல்லும் அளவிற்கு தமிழ் திரைப்படங்கள் வர ஆரம்பித்துவிட்டன. ரஜினி நடித்த 2.0 வாக இருக்கட்டும், விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் படமாக இருக்கட்டும். இவை அனைத்துமே தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற படைப்புகள் என்றே கூறலாம்.

2018 வெளிவந்த படங்களில் சிறந்த இயக்குனர் யாராக இருக்கலாம்? மக்களாகிய உங்கள் கருத்து என்ன? சிறந்த இயக்குனர்கள் என்ற வகையில் சிலரை நாங்கள் இங்கே பதிவிட்டுளோம். மறக்காமல் உங்கள் கருத்தையும் கூறவும்.

2018 flashback

1 . இயக்குனர் ஷங்கர்
2.0 என்ற பிரமாண்ட படைப்பை தமிழ் சினிமாவிற்கு தந்தவர் இய்குனார் ஷங்கர். இதுவரை இல்லாத அளவிற்கு தமிழ் சினிமாவில் அதிக பொருள் செலவில் எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் 2.0. 3D தொழில்நுட்பம், 4D சவுண்ட், பயங்கரமான VFX என தமிழ் சினிமாவை ஹாலிவுட் தரத்திற்கு கொடுத்தவர் இயக்குனர் சங்கர்.

2018 flashback

2 . இயக்குனர் ராம் குமார்
பேய், பிசாசு, திகில் என தமிழ் சினிமா ஒரு பாதையில் சென்று கொண்டிருக்க சற்று வித்தியாசமான படத்தை கொடுத்தவர் ராட்சசன் பட இயக்குனர் ராம் குமார். ஹாலிவுட் படங்களுக்கு நிகரான திகில் காட்சிகளை ராட்சசன் படத்தில் காணமுடியும் என்பது படம் பார்த்வவர்களுக்கு நிச்சயம் தெரியும்.

2018 flashback

3 . AR முருகதாஸ்
நடிகர்கள் அரசியலுக்கு வரும் நிலையில், அந்த அரசியலையே சினிமாவிற்குள் கொண்டு சென்றவர் இயக்குனர் முருகதாஸ். விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தின் இயக்குனர் முருகதாஸ் சற்று வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் முன்னோடியானவர். சர்க்கார் படம் பல சர்ச்சைகளை சந்தித்திருந்தாலும், இந்த ஆண்டில் வசூல் சாதனை படைத்த படங்களில் அதுவம் ஓன்று.

2018 flashback

4 . இயக்குனர் பிரேம்குமார்
96 என்ற காதல் காவியத்தை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் பிரேம்குமார். அடிதடி, வெட்டுக்குத்து, அரசியல், திகில் என தமிழ் சினிமா பார்த்து போரடித்துப்போன தமிழ் மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழகான காதல் காவியத்தை கொடுத்தவர் இயக்குனர் பிரேம்குமார்.

2018 flashback

5 . இயக்குனர் மித்ரன்
தொழிநுட்பம் அதீத வளர்ச்சி அடைந்தாலும், மறுபக்கம் தொழிநுட்பம் சம்மந்தமான குற்றங்களும், திருட்டுகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதை மக்களுக்கு தெளிவாக இரும்புத்திரை என்ற படம் மூலம் காட்டியவர் இயக்குனர் மித்ரன்.

வாசகர்களாகிய நீங்கள், உங்கள் மனம் கவர்ந்த இயக்குனர்களின் பெயர்களை பதிவிடுங்கள்.