#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மிகவும் அழகான டாப் 5 தமிழ் சீரியல் நடிகைகளின் ஒரு தொகுப்பு!
தற்போது சினிமாவை விட சீரியல் நடிகைகள் மிகவும் அழகாக உள்ளனர். சில நடிகைகளுக்காகவே பல சீரியல்கள் பிரமாதமாக ஓடுகின்றன. முன்னெல்லாம் சீரியல் என்றால் வயதானவர்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டும்தான் பார்ப்பது வழக்கமாக இருந்தது.
ஆனால் தற்போது சிறியவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை அனைவரும் சீரியல் பார்க்க தொடங்கி விட்டனர். அதற்கு காரணம் அந்த தொடர்களில் வரும் நடிகைகள்தான். அந்த வகையில் இன்றைய இளைஞர்களின் மனதை கவர்ந்த சீரியல் நடிகைகளைத்தான் இங்கே காண போகிறோம்.
1. ப்ரியா பவானி சங்கர்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை பிரியா பவானி ஷங்கர். இவருக்காகவே பல இளைஞர்கள் அந்த தொடரை பார்த்தனர் என்றால் அது மிகை ஆகாது. தற்போது இவர் சீரியலில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார்.
2. நித்யாராம்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நந்தினி என்ற தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை நித்யாராம். கேரளாவை சேர்ந்த இவர் நந்தினி என்னும் தொடரில் கங்கா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
3. ஷபானா
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி என்னும் தொடரில் வீட்டு வேலைக்காரியாக நடிக்கும் ஷபானா இன்றைய இளைஞர்களின் கனவு கன்னி ஏற்றே சொல்லலாம்.
4. ஆலியா மானசா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி என்னும் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆலியா. செண்பா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஆலியா இன்றைய இளைஞர்களின் மிகவும் பிடித்த சீரியல் நடிகையாக உள்ளார்.
5. வாணி போஜன்
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர் தெய்வமகள். இதில் சத்யா என்னும் கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்திருப்பார். இளைஞர்களையும் சீரியல் பார்க்க வைத்ததில் சத்யாவிற்கு தனி பங்குண்டு.