மகள், மனைவியுடன் ரேஸிங் களத்தில் தல அஜித்; வைரல் வீடியோ இதோ.!
திருச்சி: 60 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறை.!! 'JEE' தேர்வில் சாதனை படைத்த பழங்குடியின மாணவிகள்.!!
பொறியியல் பட்டப்படிப்பிற்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வில் வெற்றி பெற்று திருச்சியை சேர்ந்த பழங்குடியின மாணவிகள் சாதனை படைத்துள்ளனர். இவர்களது சாதனையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் இந்த மாணவிகளை பாராட்டி இருக்கிறார்.
ஜேஇஇ(JEE)
நுழைவுத் தேர்வு இந்தியாவில் உள்ள தலைசிறந்த தொழில்நுட்ப கல்லூரிகளான ஐஐடி, மற்றும் என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு இந்தியா முழுவதும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு வருடத்திற்கு 2 முறை நடத்தப்படுகிறது. +2-வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த தேர்வை 3 முறை எழுதலாம்.
திருச்சி பழங்குடியின மாணவிகள் சாதனை
இந்த வருடத்திற்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் திருச்சி இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த ரோகினி என்ற மாணவி 73.8% மதிப்பெண்கள் பெற்று தமிழ்நாட்டில் தேர்வு எழுதிய பழங்குடியின மாணவிகளில் முதலாவதாக தேர்ச்சி பெற்றுள்ளார். மேலும் கரிய கோவில் பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்ற பழங்குடியின மாணவியும் இந்த நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: "சுத்தியலால் ஒரே அடி.." மகன் கண் முன்னே உல்லாசம்.!! தாயின் காதலனுக்கு நேர்ந்த பரிதாபம் முடிவு.!!
60 ஆண்டுகளில் முதல்முறையாக திருச்சி என்ஐடி-க்கு தேர்வான பழங்குடியின மாணவிகள்
இதன் மூலம் திருச்சி என்ஐடி-யின் 60 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக 2 பழங்குடியின மாணவிகள் பொறியியல் பட்டப்படிப்பு படிக்க தேர்வாகி இருக்கின்றனர். ரோகினி வேதியியல் பொறியியல் பட்டப்படிப்பிலும் சுகன்யா உற்பத்தி பொறியியல் பட்டப்படிப்பிலும் சேர்ந்துள்ளனர். இந்த மாணவிகளை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டினார்
இதையும் படிங்க: ஷாக்கிங்... புது மாப்பிள்ளை மர்ம மரணம்.!! காவல்துறை தீவிர விசாரணை.!!