கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
பள்ளி மாணவிகளை சீரழித்த மருத்துவர்; முறுக்கிக்கொண்டு செய்தியாளர்கள் மீது பாய்ச்சல்.!
திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்று வந்த மாணவிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக கூறி, சிறுமிகளிடம் மருத்துவர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் சமீபத்தில் அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயம் குறித்து குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள், காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த விசாரணையை தொடர்ந்து மருத்துவர் சாம்சன், அவரின் தாய் சகாய ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அரசு மருத்துவரான சாம்சன், தலைமை ஆசிரியையான தாய் சகாய ராணியின் அதிகாரத்தை பயன்படுத்தி, பெண்கள் விடுதிக்கு சென்று சிறுமிகளிடம் மருத்துவம் பார்ப்பதாக கூறி அத்துமீறி இருக்கிறார்.
அதிகாரிகள் விசாரணை
இந்த விஷயத்தை ராணி தெரிந்துக்கொண்டாலும், அவர் மகனை கண்டிக்கவில்லை. ஒருகட்டத்திற்கும் மேல் பாதிக்கப்பட்ட சிறுமிகள் குழந்தைகள் நலத்துறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்க, அதன்பேரில் தாய்-மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், மொத்தமாக 50 க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: வால்பாறை அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர், லேப் அசிஸ்டன்ட் உட்பட 4 பேர் கைது.!
இதனிடையே, போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்ட சாம்சனை, மருத்துவமனையில் பரிசோதனைக்காக காவல்துறையினர் அழைத்து வந்த நிலையில், அங்கு செய்தியாளர்களை அவதூறாக பேசிய சாம்சன், காவல்துறையினரால் இழுத்து செல்லப்பட்டார். தற்போது தாய் - மகன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பிஞ்சு சிறுமிகளிடம் சில்மிஷம்-சிக்கிய டாக்டர்! மகனின் சேட்டையை வேடிக்கை பார்த்த தாய்! #Trichy #Harassment #Teacher #Students #Doctor #Children #Arrest #Police #NewsTamil #Newstamil24x7 pic.twitter.com/3OSNiGPjxH
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) September 5, 2024
வீடியோ நன்றிநியூஸ் தமிழ் 24x7
இதையும் படிங்க: மாணவிக்கு முத்தம் கொடுத்த எச்.எம்; உள்ளாடையுடன் ஊர்வலம் நடத்திய உறவினர்கள்.. கடலூரில் அதிர்ச்சி சம்பவம்.!