கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
"துரித உணவு உடல் நலனுக்கு எமன்" - ஆசையாக வாங்கி சாப்பிட்டு 18 வயதில் அகால மரணம்.. திருச்சியில் சோகம்.!
துரித உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள் உடலுக்கு எமன் என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
திருச்சி மாவட்டம், ராம்ஜி நகர், அந்தோனியார் தெருவில் வசித்து வருபவர் அருண் (வயது 22). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அருண் புனித பியூலா (வயது 18) என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
இதையும் படிங்க: "ஏன் இரங்கல் தெரிவிக்கல?" - விஜயை வார்த்தைகளால் வறுத்தெடுத்த தவெக நிர்வாகியின் உறவினர்கள்.!
துரித உணவால் சோகம்
இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட நிலையில், தம்பதிகளுக்கு ஏழு மாத கைக்குழந்தை இருக்கிறது. இதனிடையே, அருண் தனது காதல் மனைவிக்கு கடந்த 6 மாதமாகவே இரவு நேரத்தில் நூடுல்ஸ், பிரைடு ரைஸ் என பாஸ்ட் போட உணவுகளை சாப்பிட வாங்கிக்கொடுத்துள்ளார்.
இதனிடையே, சமீபகமாகவே தொடர் உடல்நலக்குறைவால் பியூலா பாதிக்கப்பட்ட நிலையில், அவரை சிகிச்சைக்காக குடும்பத்தினர் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதி செய்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த பியூலா கோமா நிலைக்கு சென்றுள்ளார்.
கோமாவிலேயே பிரிந்த உயிர்
ஒருகட்டத்தில் கோமாவிலேயே அவரின் உயிர் பிரிந்துள்ளது. பியூலாவின் இரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்ததில், பியூலாவின் கல்லீரல் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அவர் தினமும் பாஸ்ட் புட் சாப்பிட்டதால், கல்லீரல் நேரடியாக பாதிக்கப்ட்டு மரணம் ஏற்பட்டுள்ளது.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரை காப்பாற்ற இயலவில்லை. இந்த விஷயம் அவரின் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 7 மாத கைக்குழந்தை அன்னையை தேடி தவித்து வருகிறது.
மனைவிக்கு பாஸ்ட் புட் பிடிக்கும் என்று உங்களின் அன்புள்ள மனைவிக்கும், குழந்தைக்கும் உங்களின் கைகளால் விஷத்தை ஊட்டாதீர்கள்...
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்தியதால் சோகம்; சீல் வைத்த பயங்கரம்.. பெரம்பலூரில் அதிர்ச்சி.!