பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நீச்சல் உடையில் டால்பினுடன் கொஞ்சி விளையாடும் திரிஷா!!
1999 ஆம் ஆண்டு சென்னை அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிஷா அதன்பின் சினிமா துறையில் கால் பதித்தார் இவர் தமிழில் நடித்த சாமி கில்லி போன்ற வெற்றி படங்களை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். இவர் கடந்த 15 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்து நடித்துவருகிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இவர் நடித்த ஜெஸ்ஸி கதாபாத்திரம் காலத்திற்கும் அழியாத வண்ணமாய் ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்கும். நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திரிஷா 35 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் கதாநாயகி ஆகவே பல படங்களில் நடித்து வருகிறார்.
எந்நேரமும் சுறுசுறுப்புடன் தெரியும் திரிஷா அவ்வப்போது தனது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த வகையில் சமீபத்தில் அவர் நீச்சல் உடையில் டால்பினுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Believe in love at first sight🐬❤️ pic.twitter.com/5IevZvYbuW
— Trish Krish (@trishtrashers) September 17, 2018
இவர் தற்போது விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ள 96 திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தால் இவர் மீது ரசிகர்களுக்கு இன்னும் ஆர்வம் அதிகமாகி உள்ளது.