பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
திடீரென சென்னை திரும்பிய நடிகை திரிஷா.! தளபதி விஜய்யின் லியோ படத்திலிருந்து விலகலா?? என்னதான் ஆச்சு??
நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தை இயக்கி வெற்றிவாகை சூடிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது தளபதி விஜய் நடிப்பில் தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார். தளபதி விஜயின் 67வது படமான இப்படத்திற்கு லியோ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதன் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷாவும், அவர்களுடன் அர்ஜுன்,கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் என பெரும் நடிகர் பட்டாளமே நடித்து வருகின்றனர். நடிகர் விஜய்யுடன் திரிஷா பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். மீண்டும் இத்திரைப்படத்தில் இணைவது ரசிகர்கள் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியது. இந்த நிலையில் திடீரென திரிஷா காஷ்மீரில் இருந்து சென்னை வந்துள்ளார்.
இந்த நிலையில் நடிகை திரிஷா லியோ படத்தில் இருந்து விலக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதற்கிடையில் தற்போது காஷ்மீரில் அதிகபனிப்பொழிவு இருப்பதாகவும், அதனால் உடல் நலக்கோளாறு ஏற்பட்டதால் திரிஷா சென்னை திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் விரைவில் காஷ்மீர் திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.