கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் தெரியுமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
190 கிமீ சைக்கிள் பயணம்.. தவெக மாநாடு நோக்கி மாற்றுத்திறனாளி ரசிகரின் நெகிழ்ச்சி செயல்.!
தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்து வரும் தவெக நிர்வாகி மற்றும் தீவிர விஜய் ரசிகர் ராஜா. இவரின் கால்கள் சாலை விபத்தில் பறிபோன நிலையில், மாற்றுத்திறனாளியாக தற்போது இருக்கிறார். பிரின்டிங் பிரஸ் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
மாற்றுத்திறனாளி ரசிகர்
கால்கள் இழந்தாலும் தன்னம்பிக்கையுடன் அவர் வாழ்ந்து வரும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல் அரசியல் மாநாட்டுக்குச் சென்று, விஜயிடம் தனது தரப்பு கோரிக்கைகளை முன்வைக்க திட்டமிட்டு இருக்கிறார்.
இதையும் படிங்க: தவெக தலைமைக்கு ஷாக் தந்த நிர்வாகிகள்.. பாமகவில் திரண்டு வந்து இணைவு..! காரணம் என்ன?.
மிதிவண்டியில் பயணம்
இதற்காக தஞ்சாவூர் முதல் விக்கிரவாண்டி வரை சுமார் 190 கிலோ மீட்டர் தூரம், தனது ஒற்றைக்கால் கொண்டு அவர் மிதிவண்டியில் பயணம் செய்யவுள்ளார். நாளை மதியம் விக்கிரவாண்டி சென்று, பின் அங்கிருந்து அவர் மாநாட்டுக்கு செல்கிறார்.
இதையும் படிங்க: தவெக விஜயின் முதல் மாநாடு; பழ. கருப்பையா சொல்வது என்ன? விபரம் உள்ளே.!