தவெக தலைமைக்கு ஷாக் தந்த நிர்வாகிகள்.. பாமகவில் திரண்டு வந்து இணைவு..! காரணம் என்ன?.
கட்சியின் செயல்பாடுகள் தனக்கு பிடிக்காத காரணத்தால், தவெகவில் இருந்து விலகி பாமகவில் இணைந்துள்ளதாக முன்னாள் தவெக நிர்வாகி விளக்கம் அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜிகே தமிழரசன். இவர் தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்ட நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இதனிடையே, அவருக்கு கட்சி தலைமையுடன் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
பாமகவில் இணைவு
இதனால் தவெக-வில் இருந்து அவர் தன்னை விலக்கிக்கொண்ட நிலையில், இன்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் பாமகவில் தன்னை இணைத்துக்கொண்டார். அதேபோல, அவருடன் சுமார் 100 க்கும் மேற்பட்ட இளைஞர்களும் தங்களை பாமகவில் இணைத்துக்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்.. கை, கால்கள் கட்டப்பட்டு பலாத்காரம்.!! 13 வயது சிறுமிக்கு நேர்ந்த கோர முடிவு.!!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு
நாளை (அக்.27) அன்று விழுப்புரம் மாவட்டத்தில் தவெக முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இன்று 100 க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் தங்களை பாமகவில் இணைந்துகொண்டுள்ளனர். நாளைய தவெக மாநாட்டின் கட்சியின் கொள்கை, கோட்பாடு உட்பட பல விஷயங்கள் அறிவிக்கப்படவுள்ளன.
#JUSTIN | தவெகவில் இருந்து விலகல் #NewsTamil24x7 | #TVK | #TVKMaanadu | #TVKMaanaduoct27 | #TVKThalaivarVijay | #TVKConference | #TVK_maanadu | #pmk | #PattaliMakkalKatchi | #Ramadoss | #AnbumaniRamadoss | #TVKVijay#PMK pic.twitter.com/nTR4vmz0Y1
— Pallavas 🦁 (@CholaPallavan) October 26, 2024
இதையும் படிங்க: திருச்சியில் அதிர்ச்சி... பொது இடத்தில் பெண்ணுக்கு பாலியல் சீண்டல்.!! இளைஞர் கைது.!!