அஜித் குமார் ரேஸிங்; மூன்றாம் இடம் பிடித்து அஜித் குழுவினர் சாதனை.!
மதுரை அருகே பயங்கரம்... துள்ளத் துடிக்க கொலை செய்யப்பட்ட இரட்டையர்கள்.!!
மதுரை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டியில் காளைகள் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இரட்டை சகோதரர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தப்பியோடிய குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இரட்டை சகோதரர்கள்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணா நகரில் வசித்து வருபவர் ஆண்டிச்சாமி. இவருக்கு ஜெயசூர்யா மற்றும் சுபாஷ் என்ற இரட்டை மகன்கள் இருந்தனர். இவர்களுக்கு வயது 23. இவர்கள் இருவரும் தங்கள் வீட்டில் உள்ள காளைகளை மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ளும் வண்ணம் பயிற்சியளித்து வந்துள்ளனர்.
சிவகங்கை போட்டியில் பரிசு
இரட்டை சகோதரர்கள் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற பல மஞ்சுவிரட்டு போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளை வென்றுள்ளனர். மேலும் எல்லா போட்டிகளிலும் தங்களது காளைகளை முதலில் அவிழ்த்து விடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் பனங்குடி கோவிலில் நடைபெற்ற மஞ்சுவிரட்டின் போது முன்விரோதம் ஏற்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: திருச்சியில் துயரம்... மதுவால் வந்த விரக்தி.!! கத்திரிக்கோலால் கழுத்தை அறுத்த முதியவர்.!!
கொலையில் முடிந்த முன் விரோதம்
இந்நிலையில் ஜூன் 12-ம் தேதி பனங்குடி கோவில் திருவிழாவில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் இரட்டை சகோதரர்கள் தங்களது காளையை அவிழ்த்துள்ளனர். அப்போது சிவகங்கை மாவட்டம் புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மதன் மற்றும் அவரது நண்பர்கள் காளைகளை பிடித்ததாக தெரிகிறது. அப்போது இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிந்திருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு ஜெயசூர்யா மற்றும் அவரது இரட்டை சகோதரர் சுபாஷ் ஆகியோர் நடந்து சென்று கொண்டிருந்தபோது பைக்கில் வந்த மதன் மற்றும் அவரது நண்பர்கள் 8 பேர் ஜெயசூர்யா மற்றும் அவரது இரட்டை சகோதரர் சுபாஷை வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
காவல்துறை விசாரணை
இந்த கொலை சம்பவத்தை தொடர்ந்து விரைந்து வந்த காவல் துறையினர் உயிரிழந்த சுபாஷ் மற்றும் ஜெயசூர்யாவின் உடல்களை வீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் கொலை வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மதன் மற்றும் அவரது நண்பர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: அடப்பாவமே... கள்ளக்காதலை தட்டி கேட்ட கணவனுக்கு தர்ம அடி.!! மனைவி, மாமியார் கைது.!!