"என் வீட்டுக்காரருக்கு சுத்திப்போடணும்" - மதகஜராஜா ரிலீஸ் குறித்து குஷ்பூ நெகிழ்ச்சி பேட்டி.!
திருச்சி அருகே பயங்கரம்... முசிறியை அதிர வைத்த இரட்டை கொலை.!! காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளி.!!
திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை அதிர்ச்சியும் பதற்றமும் அடையச் செய்திருக்கிறது. இந்த கொலை சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபரிடம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்காதல்
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள அந்தரப்பட்டி குடோன் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மனைவி கீதா(46). இவர் கணவனை பிரிந்த நிலையில் தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கீதாவிற்கும் முசிறி வாளவந்தி பகுதியைச் சேர்ந்த பாலச்சந்திரன் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.
இரட்டை கொலை
இந்நிலையில் கீதா, பாலச்சந்திரனிடம் கேஸ் வாங்குவதற்கு பணம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை 6:30 மணிக்கு கீதா வீட்டிற்கு வந்த பாலச்சந்திரன் அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், கீதாவை அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தார். இதனைத் தொடர்ந்து தனது ஊருக்கு சென்ற அவர் தன்னோடு நிலத்தகராறில் பிரச்சனை செய்த ரமேஷ் என்ற நபரை ஜெம்புநாதபுரம் தேடிச்சென்று வெட்டி படுகொலை செய்தார்.
இதையும் படிங்க: அதிரடி நடவடிக்கை... கர்ப்பிணி பெண்களை ஒரே ஸ்ட்ரக்சரில் அழைத்துச் சென்ற சர்ச்சை.!! பெண் ஊழியர் சஸ்பெண்ட் .!!
காவல்துறை விசாரணை
இந்த இரட்டை படுகொலைகளைத் தொடர்ந்து சம்பவ இடங்களுக்கு விரைந்த காவல்துறையினர் இறந்த இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பாலச்சந்திரன் ஆயுதத்துடன் காவல் நிலையம் சென்று சரணடைந்தார். இவர் கடந்த 2003 ஆம் வருடம் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் 15 வருடம் சிறை தண்டனை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருச்சி: 60 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறை.!! 'JEE' தேர்வில் சாதனை படைத்த பழங்குடியின மாணவிகள்.!!