#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்பட டிரைலர் வெளியானது: லிங்க் உள்ளே.!
டிக்கிலோனா படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான கார்த்தி யோகி, மீண்டும் சந்தானத்துடன் இணைந்து வடக்குப்பட்டி ராமசாமி (Vadakupatti Ramasamy) என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.
இப்படத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ், நிழல்கள் ரவி, எம்.எஸ் பாஸ்கர், மாறன், நான் கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், ரவி மரியா உட்பட பலரும் நடித்துள்ளனர்.
படத்திற்கு சியான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். பீப்புள் மீடியா பேக்டரி தயாரித்து வழங்குகிறது. வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் ஆனது வெளியிடப்பட்டுள்ளது.