சூப்பர் ஸ்டாரின் 45 ஆண்டு சாதனை! அசத்தலான கவிதையால் வாழ்த்து கூறிய முக்கிய பிரபலம்!!



vairamuthu-poet-wishing-rajini

நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி இயக்குனர்களின் வெற்றித் திரைப்படங்களில் நடித்து தற்போது மாபெரும் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறக்கிறார்.

இந்நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி வந்தால் ரஜினி திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். மேலும் மோகன்லால், மம்மூட்டி முதல் ஸ்ரேயா சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான்  என பலரும் காமன் டிபியை வெளியிட்டு வருகின்றனர். மேலும் #45YearsOfRajinismCDP என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து  சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்துக்கு  தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்,  நகலெடுக்க முடியாத உடல்மொழி, சூரியச் சுறுசுறுப்பு, கிழவி குழவியென வசப்படுத்தும் வசீகரம், 45 ஆண்டுகளாய் மக்கள் வைத்த உயரத்தைத்  தக்கவைத்த தந்திரம், இரண்டு மணிநேரத் தனிமைப் பேச்சிலும் அரசியலுக்கு பிடிகொடுக்காத பிடிவாதம், இவையெல்லாம் ரஜினி; வியப்பின் கலைக்குறியீடு! என பதிவிட்டுள்ளார்.